10
CABBAGE DISHES முட்டை கோஸ் சப்பாத்தி By thayaparan vagitha Created 03/09/2006 - 22:58 தேவையான பொருள்கள்:

Cabbage Dishes

Embed Size (px)

Citation preview

CABBAGE DISHES

முட்டை கோஸ் சப்பாத்திBy thayaparan vagithaCreated 03/09/2006 - 22:58தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு - 2 கப் முட்டை கோஸ் துருவியது - 1 1/2 கப் புதினா இலை - சிறிதளவு இஞ்சி - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - ஒன்று உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 மேசைக்கரண்டிசெய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், புதினா என்பவற்றை பொடி, பொடியாக அரியவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு முட்டைகோஸ், வெங்காயம், மிளகாய், புதினா, இஞ்சி, சிறிதளவு உப்பு சேர்த்து லேசாக வதக்கவும். கோதுமை மாவுடன், உப்பு மற்றும் வதக்கியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் வைக்கவும். பின்பு மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி மேல் மாவு தூவி சிறிய சிறிய சப்பாத்திகளாக (சற்று தடிப்பாக) தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு சிறிது எண்ணெய் விட்டு எடுத்து சுடச்சுட பரிமாறவும். முட்டைகோஸ்-பனீர் ரோல்ஸ்By NithyagopalCreated 29/06/2006 - 04:57தேவையான பொருள்கள்: ப்ரெட் ஸ்லைஸ் - 10 முட்டை கோஸ் - 1.5 கப் துருவியது உதிர்த்த பனீர் - 3/4 கப் கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - 1/2 கப் உப்பு - 1/2 டீஸ்பூன் கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்செய்முறை: ப்ரெட்டின் ஓரத்தின் வெட்டவும். கடலைமாவை சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும். முட்டை கோஸ், உப்பு, கொத்தமல்லி, பனீர், பச்சை மிளகாயை ஒன்றாக கலக்கவும். இந்த கலவையை 10 உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ப்ரெட்டின் ஒரு மூலையில் இந்த உருண்டைகளை வைத்து, ப்ரெட்டை உருட்டவும். ப்ரெட்டின் ஒரத்தை கடலைமாவுக் கலவையால் ஒட்டவும். எண்ணெயில் இந்த ப்ரெட்டை பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும். பட்டாணி கோஸ் சாதம் Ingredients : முட்டை கோஸ் - ஒரு கப் பச்சை பட்டாணி - அரை கப் சின்ன வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 3 உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை - சிறிது கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க மிளகாய் தூள், மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கு ஏற்ப கொத்தமல்லி - சிறிது

சாதம் - ஒரு கப்Directions : முட்டைகோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும் துண்டுகளாக நறுக்கவும்.பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின்பு பருப்புகள், நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.அதில் கோஸ் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.தண்ணீர் நன்கு சுண்டியதும், சாதத்தை சேர்க்கவும்.மசாலா மற்றும் காய்களுடன் சேரும்படி உடையாமல் கிண்டி எடுக்கவும்.கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். சுவையான பட்டாணி கோஸ் சாதம் ரெடி. முட்டைகோஸ் துவரம் பருப்பு கூட்டுBy Jaleela BanuCreated 03/10/2007 - 12:36தேவையான பொருள்கள்: முட்டை கோஸ் - கால் கிலோ துவரம் பருப்பு - அரை கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - இரண்டு உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - கால் டீஸ்பூன் தனியா தூள் - அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் தேங்காய் - கால் கப் (துருவியது) தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - இரண்டு கறிவேப்பிலை - சிறிது பூண்டு - மூன்று பல் கொத்தமல்லி தழை - கொஞ்சம் மேலே அலங்கரிக்கசெய்முறை: துவரம் பருப்பை மஞ்சள் தூள் போட்டு குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும். முட்டை கோஸ், வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து தட்டி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் தக்காளி, பச்சைமிளகாய், முட்டை கோஸ் போட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு நன்றாக கிளறி மிளகாய் தூள், தனியா தூள் உப்பு போட்டு மூன்று நிமிடம் மூடி போட்டு வேக விடவும். பிறகு வேக வைத்துள்ள துவரம் பருப்பை மத்தால் (அ) கரண்டியால் மசித்து அதில் போடவும். பிறகு கிளறி விட்டு தேங்காய் துருவலை போட்டு மீண்டும் கிளறி ஒரு கொதி கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். முட்டைகோஸ் சட்னி Ingredients : நறுக்கிய முட்டைகோஸ் - அரை கப் புதினா - கால் கப் உளுந்து, கடலை பருப்பு - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 8 கடுகு, சீரகம், பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவுDirections : முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பானில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்பின்பு முட்டை கோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.புதினா இலைகளை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஆற வைத்து அரைக்கவும்.பின்பு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து சேர்க்கவும். எளிமையாக செய்யக்கூடிய முட்டை கோஸ் சட்னி தயார் சவுத் ஃப்ரைட் ரைஸ்By appufarCreated 15/10/2011 - 23:43தேவையான பொருள்கள்: பாஸ்மதி(அ)புழுங்கல்அரிசி _ அரை டம்ளர் பெரிய வெங்காயம் _ ஒன்று முட்டை _ ஒன்று கேரட்,முட்டை கோஸ் _ சம அளவு பொடியாகஅரிந்தது அரைகப் முருங்கை கீரை _ கால் கப் மிளகுத்தூள் __ அரை ஸ்பூன் பச்சை மிளகாய் _ ஒன்று சோயா சாஸ் _ ஒரு ஸ்பூன் எண்ணெய் _ நான்கு ஸ்பூன் உப்பு _ தேவைக்கேற்பசெய்முறை: அரிசியை நன்கு கழுவி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதற்க்கேற்ப உப்பை சேர்த்து குக்கரில் வைத்து ஒரு ஸ்டீம் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து ஏழு நிமிடம் கழித்து இறக்கவும். அதற்க்கிடையில் இதர பொருட்களை தயார் நிலையில் வைக்கவும். ஒரு அகன்ற வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு பொடியாக அரிந்து வைத்திருக்கும் கேரட்,கோஸ்,கீறிய பச்சைமிளகாய் இவற்றுடன் அதற்க்கேற்ற உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியவுடன்,மிளகுத்துள் சேர்த்து ஒரு தடவை வதக்கி விட்டு,பின் சோயா சாஸும் ஊற்றி கிளறிய பின்,முட்டை உடைத்து ஊற்றி கிளறவும். கொஞ்சம் உதிரியானதும்,முருங்கை இலையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு ரெடியாக இருக்கும் சாதத்தை உதிர்த்தாற்ப்போல் போட்டு நன்கு ஒன்று சேர கிளறவும். எல்லாம் பக்கமும் ஒன்று கலந்ததும்,விரும்பினால் பொடியாக நறுக்கிய மல்லி தழையை தூவி இறக்கவும். சுவையான,சத்தான குழந்தைகளும் விரும்பக்கூடிய சவுத் ஃப்ரைட் ரைஸ் தயார். ஸ்பைசி முட்டைகோஸ்By asiya omarCreated 15/01/2009 - 00:45தேவையான பொருள்கள்: முட்டை கோஸ் - கால் கிலோ டால்டா அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் வெங்காயம் - 1 சில்லி பவுடர் - கால் அரைஸ்பூன் வற்றல் - 1 உப்பு - தேவைக்கு சீனி - பின்ச் லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)செய்முறை: வெங்காயம், முட்டை கோஸை மெலிதாக கட் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் அல்லது டால்டா விட்டு சீரகம், வற்றல் கிள்ளி போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். முட்டைகோஸை சேர்க்கவும். சில்லி பவுடர் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். உப்பு, பின்ச்

சீனி சேர்த்து லைம் ஜூஸ் சேர்த்து பிரட்டவும். சுவையான ஸ்பைசி முட்டைகோஸ் ரெடி. இதை சாதம் சப்பாத்தி உடன் பரிமாறவும். கோஸ் பொரியல்By shadiqahCreated 07/02/2009 - 17:36தேவையான பொருள்கள்: முட்டை கோஸ் - 1/2 கிலோ உப்பு - சுவைக்கு மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன் ஆரஞ்ச் கலர்பொடி - 1 பின்ச் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்செய்முறை: முட்டை கோஸை 3 இன்ச் நீளம் 2 இன்ச் அகலத்திற்கு தடிமனாக நறுக்கிகொள்ளவும். 1/2 கிலோ கோஸை 8 துண்டுகளாக நறுக்கிகொள்ளலாம். சிறிது நீரில் பொடி வகைகள், உப்பு சேர்த்து கலந்து கோஸ் துண்டுகளில் பிரியாதவாறு தடவவும். கோஸ் இதழ்களினுள்ளும், உப்பு ,காரம் பரவுமாறு செய்யவும். இதனை தனிதனியாக நூலால் கட்டி முடிச்சு போடாமல் அதிக இறுக்கமில்லாமல் கட்டவும். தவாவில் எண்ணெய் விட்டு வேகும் வரை வதக்கவும். சாப்பிடும் போது நூலை பிரித்து விட்டு பரிமாறவும். வித்தியாசமான பொரியல் இது. காபேஜ் ரோல்ஸ்By NithyagopalCreated 13/07/2006 - 04:52தேவையான பொருள்கள்: முட்டை கோஸ் இலைகள் - 8 வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது பனீர் - 1 கப் மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 உப்பு - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 1/2 கப் நூல் கண்டு - கட்டுவதற்கு கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்செய்முறை: முதலில் முட்டை கோஸ் இலைகளை சுத்தம் செய்து, சூடான நீரில் 5 - 6 நிமிடம் வேக வைக்கவும். ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு மற்ற சாமான்களை சேர்த்து (1/2 கப் எண்ணெய் தவிர) 5 - 6 நிமிடம் வதக்கி, கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். சுத்தம் செய்த இலைகளில் 2 ஸ்பூன் வதக்கிய கலவையை நடுவில் வைத்து, நான்கு புறமும் மடித்து நூலால் கெட்டியாக கட்டவும். கலவை வெளியே வராமல் பார்த்துக் கொண்டு, இலைப் பொட்டலத்தை 1/2 கப் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும். கொத்து பருப்பு சாம்பார் Ingredients : பாசி பருப்பு - ஒரு கப் சின்ன வெங்காயம் - ஒரு கப்

தக்காளி - ஒன்று பச்சைமிளகாய் - 2 கத்திரிக்காய் - ஒன்று கேரட், முட்டைகோஸ் - சிறிதளவு பூண்டு - 2 பல் எண்ணெய் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து மல்லி தழை - சிறிதளவுDirections : பாசி பருப்பை நன்கு கழுவி விட்டு தாராளமாக தண்ணீர் விட்டு மஞ்சள் பொடியை அதில் சேர்த்து நன்கு மசிய வேக விடவும்.வெங்காயத்தை தோல் உரித்து நன்கு அலசி விட்டு நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். முட்டை கோஸ், கேரட்டையும் அரிந்து கொள்ளவும். பச்சைமிளகாயை கீறி வைத்து கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் அரிந்து வைத்து கொள்ளவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்த பருப்பில் பாதியை இரண்டரை டம்ளர் தண்ணீருடன் கலந்து கொண்டு அதில் அரிந்த வெங்காயத்தில் முக்கால்வாசியும், மற்ற காய்களையும் ( பூண்டை தவிர்த்து) சேர்த்து மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி, மல்லித்தூள், தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.ஓரளவு வெந்ததும் மீதி உள்ள பருப்பையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.பின்பு அதை அடுப்பிலிருந்து இறக்கி விட்டு, வேறு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், மீதி உள்ள வெங்காயம், நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வதங்கிய பின் அரை தேக்கரண்டி மிளகாய்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு சாம்பாரை அதில் ஊற்றவும். மல்லி தழையை நறுக்கி தூவி ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்.சுவையான கொத்து பருப்பு சாம்பார் தயார். இது சாதம், இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் இவற்றிற்கு ஏற்றதாக இருக்கும்Note: மற்ற பருப்புகளை விட பாசிபருப்பு மிகவும் உடம்பிற்கு நல்லது. உருளைக்கிழங்கும், முருங்கைக்காய், மாங்காவும் கூட சிறிதாக அரிந்து சேர்க்கலாம். இதை எங்கள் வீட்டில் பலமுறைகளில் செய்வோம். முட்டை சாப்பிடுபவர்கள் இருந்தால் தாளிக்கும் போது மிளகாய்தூள் எல்லாம் போட்ட பிறகு முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி லேசாக கிளறி விட்டு பின்பு சாம்பாரை ஊற்றவும். இது ஒரு விதம். ஸ்பெஷலாக செய்வதாக இருந்தால் நிறைய சின்ன வெங்காயம் மட்டும் சேர்த்து காய்கள் இல்லாமல் கடைசியில் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து இறக்குவோம். தாளித்த பின் முட்டையை மெதுவாக ஊற்றி குறைந்த தீயில் வைத்து வேக விட்டு இறக்கலாம். குழந்தைகளுக்கு சாதத்தில் நெய் ஊற்றி இந்த சாம்பாரை ஊற்றி முட்டையுடன் கொடுக்கலாம். மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஸ்பைசி ரைஸ்

By Mrs vathsala NatkunamCreated 21/01/2009 - 14:03தேவையான பொருள்கள்: பீன்ஸ், காரட் - 150 கிராம் முட்டை கோஸ் - 150 கிராம் வெங்காயம் - 1 பூண்டு - 4 பல் அரிசி - 2 கப் காய்ந்த மிளகாய் - 5(விழுதாக அரைக்கவும்) கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய்செய்முறை: காய்கறியையும், வெங்காயம், பூண்டையும் நறுக்கி வைக்கவும். அரிசியை நன்கு கழுவி 10 நிமிடம் ஊறவிடவும். அரிசியை குக்கரில் 2.5 மடங்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்த சாதம் உதிரி உதியாக ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க வேண்டும். ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டை பொன்னிறமாக வதக்கவும். மிளகாய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி நறுக்கிய காய்கறிகளை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிவிடவும். காய் வெந்தது சாதத்தை சேர்த்து நன்கு கலக்கி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்ஒட்ஸை பாலில் கலந்து சாப்பிட்டு போரடிக்கும் போது இது போல் செய்து சாப்பிடலாம். ஒரு பவுல் ஓட்ஸ் வெஜ் போரிட்ஜோடு ஒரு கப் ஆரஞ்சு ஜூசும் குடித்தால் அது முழுமையான காலை உணவாக இருக்கும். இங்கு கொடுத்திருக்கும் அளவு ஒருவருக்கு சரியாக இருக்கும். Ingredients : ஓட்ஸ் - 2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கின கேரட் - ஒரு மேசைக்கரண்டி பொடியாக நறுக்கின பீன்ஸ் - ஒரு மேசைக்கரண்டி பொடியாக நறுக்கின முட்டை கோஸ் - ஒரு மேசைக்கரண்டி பொடியாக நறுக்கின இஞ்சி - 3/4 தேக்கரண்டி பொடியாக நறுக்கின பூண்டு - ஒரு தேக்கரண்டி பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் - கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்) வெஜ் ஸ்டாக் அல்லது சிக்கன் ஸ்டாக் பவுடர் - கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்) சர்க்கரை(சீனி) - கால் தேக்கரண்டி மிளகு தூள் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுDirections : காய்கறிகள், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.சூப் செய்ய போகும் பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், வெஜ் அல்லது சிக்கன் ஸ்டாக் பவுடர், உப்பு, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.தண்ணீர் கொதி வந்ததும் கேரட், பீன்ஸ் சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் வேக விடவும்.அதன் பின்னர் முட்டைகோஸ் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.இந்த காய்கறி கலவையில் ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.சுவையான ஓட்ஸ் போரிட்ஜ் தயார். தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் மிளகு

தூள் தூவி சூடாக பரிமாறவும். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிசிவா அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும். Note: அதிகம் காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து விடலாம். எலுமிச்சைசாறும் அவரவர் ருசிகேற்ப சேர்த்துக் கொள்ளலாம். மேலே சிறிது கார்ன்ஃப்ளேக்ஸ் தூவி சாப்பிட்டால் இடையிடையே மொறுமொறுப்பாக சாப்பிட சுவையாக இருக்கும். வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமாBy srividhyaiyerCreated 03/12/2010 - 23:38தேவையான பொருள்கள்: ஓட்ஸ் 2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட், முட்டை கோஸ், குடை மிளகாய், முள்ளங்கி...எல்லாம் சேர்த்து ஒரு கப் (அவரவர் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்) இஞ்சி 2 இன்ச் பச்சை மிளகாய் 4 நன்கு பழுத்த தக்காளி ஒன்று (சிறியதாக இருந்தால் இரண்டு) கறிவேப்பிலை ஒரு கொத்து சீரகம் அரை டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு அரை டீ ஸ்பூன் கடலை பருப்பு அரை டீ ஸ்பூன் எண்ணெய் 4 டீ ஸ்பூன் உப்பு தேவையான அளவுசெய்முறை: ஓட்ஸை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும். பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், உளுத்தம் பருப்பு கடலை பருப்பை போட்டு பொரித்துக் கொள்ளவும். அடுத்து, பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அனைத்து காய்களும் நன்கு வதங்கிய பிறகு, அத்துடன் பொடி பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பிறகு வறுத்து வைத்துள்ள ஒட்சையும் அத்துடன் சேர்த்து நன்கு கிளறவும். ஓட்ஸை போட்ட உடன் கலவை மிகவும் கெட்டியாகிவிடும். எனவே ஒரு ஸ்பூனால் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். (4 டீ ஸ்பூனுக்கு மேல் தண்ணீர் சேர்க்க வேண்டாம்) . காய்கறி கலவையுடன் ஓட்ஸ் சேர்ந்து வந்த உடன்...சூடாகப் பரிமாறவும். கேபேஜ் வித் தால்By shadiqahCreated 18/01/2009 - 19:26தேவையான பொருள்கள்: முட்டை கோஸ் - 200 கிராம் பச்சை மிளகாய் - 4 கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 1 கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - சுவைக்கு எண்ணெய் - 2 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 1/4 கப்செய்முறை: கோஸ், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவந்து விடாமல் வதக்கவும். நறுக்கிய கோஸ், கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துவதக்கவும். சிறிது உப்புடன், கடலைப்பருப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து மூடி விடவும். பருப்பு, கோஸ் நன்கு வெந்து, நீர் வற்றி, எண்ணெய் பிரிந்ததும் இறக்கி விடவும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

ஸ்பெஷல் ஆம்லேட் Ingredients : முட்டை - 2 கோஸ் - ஒரு மேசைக்கரண்டி (நறுக்கியது) பெரிய வெங்காயம் - பாதி இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - ஒன்று கறிவேப்பிலை - 3 இதழ் மல்லி தழை - சிறிது மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கு வெண்ணெய் - சிறிது Directions : முட்டையை நன்றாக நுரை வர அடித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கோஸ், கறிவேப்பிலை, மல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பச்சையாக கோஸ் சாப்பிட பிடிக்காதவர்கள் பேனில் சிறிது வெண்ணெய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.பேனில் சிறிது வெண்ணெய் போட்டு உருக்கவும்.மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் முட்டையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.பேனில் முட்டை கலவையை ஊற்றி வெந்ததும் எடுக்கவும். சுவையான ஸ்பெஷல் ஆம்லேட் ரெடி. முட்டைகோஸ் சட்னிBy Subha JayaprakashCreated 13/05/2008 - 07:35தேவையான பொருள்கள்: முட்டை கோஸ் -- 1/4 கிலோ (கழுவி நறுக்கியது) உளுந்து -- 1/2 டீஸ்பூன் பச்சைமிளகாய் -- 4 என்னம் வெங்காயம் -- 1/2 கப் (நறுக்கியது) தேங்காய் -- 1/4 மூடி கறிவேப்பிலை -- 1 இனுக்கு உப்பு -- தே.அ தாளிக்க: கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை -- 1 இனுக்கு வெங்காயம் -- 2 ஸ்பூன் (தாளிக்க பொடியாக நறுக்கியது) மிளகாய் வத்தல் -- 3 என்னம்செய்முறை: வாணலியில் 1/4 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி முட்டைகோசை வதக்கி எடுக்கவும். அதே வாணலியில் உளுந்தை வறுத்து எடுக்கவும். பின் பச்சைமிளகாய், வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். ஆறியபின் எல்லாவற்றையும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை போட்டு நன்கு வதக்கி பின் அரைத்த சட்னியை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறலாம். இது தோசைக்கு நன்றாக இருக்கும்.

முட்டைகோஸ் துவையல்By kavisivaCreated 05/12/2007 - 09:40தேவையான பொருள்கள்: முட்டைகோஸ் - 100 கிராம் பச்சைமிளகாய் - 4 (காரத்துக்கு ஏற்ப) பூண்டு - 2 பல் சீரகம் - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி புளி - நெல்லிக்காய் அளவு மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்துசெய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில் 1/2 தேக்கரண்டி சீரகம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கோஸ், கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். பச்சை வாசனை போனதும் இறக்கி ஆற விடவும். முட்டை கோஸ் கலவையுடன், வறுத்த பருப்பு வகைகள், உப்பு, புளி, மஞ்சள்தூள், மீதமுள்ள சீரகம், பூண்டு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.குறிப்பு: சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். முட்டைகோஸ் அடைBy Subha JayaprakashCreated 23/09/2007 - 16:06தேவையான பொருள்கள்: பச்சரிசி -- 200 கிராம் கடலை பருப்பு -- 50 கிராம் துவரம் பருப்பு -- 50 கிராம் முட்டை கோஸ் -- 200 கிராம் (மிகவும் பொடியாக நறுக்கியது) பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் -- காரத்திற்கேற்ப வெங்காயம் -- 1 கப் (நறுக்கியது) சீரகம் -- 1 டீஸ்பூன் சோம்பு -- 1 டீஸ்பூன் உப்பு -- தே.அசெய்முறை: அரிசி, துவரம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய் , பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கரகர வென அரைக்கவும். மாவுடன் சீரகம்,சோம்பு, வெங்காயம் , முட்டைகோஸ் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை தோசைக்கல்லில் ஊற்றி இரு பக்கமும் எண்ணைய்/நெய் ஊற்றி வெந்ததும் ரெடி.