62
08.10.2015 இறைய வேளா செதிக அதிெய...ஆொிய...இமய: நடக , தம கரக : 211 திய உயிாினக கபிட இமயமறை அதிெய நிறைத உைக. இக பா தறை சகாட நடக மக, தம கரக, தமாக பா பைறே, ஊதா நிை ககறள உறடய தேறள, ிிதிரமான றை, அதமான என 211 றகயிைான திய உயிாினக கடைியபளன. கிைஇமயமறையி மபதி ஆஶக நடதன. இபகதி 'ஆெியாேி அத' என அறைகபகிைத. இத, அாிய உயிாினகளி இடமாக திககிை. இதியாேி டகிைமாநிைக (அரணாெைபிரவதெ, ிகி, வமக காள), டா, வநபாள, மியாம சதக திசப ஆகியறே இக உளன.

08.10.2015agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/Oct/08_oct... · 2015-10-08 · கடந்த 2009 ுதல்- 2014 ேறர ஆராய்ச்ெி செய்த

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 08.10.2015

    இன்றைய வேளாண் செய்திகள்

    அதிெயம்...ஆச்ொியம்...இமயம்: நடக்கும் மீன், தும்மும் குரங்கு : 211

    புதிய உயிாினங்கள் கண்டுபிடிப்பு

    இமயமறை அதிெயம் நிறைந்த உைகம். இங்கு பாம்பு தறை சகாண்ட

    நடக்கும் மீன்கள், தும்மும் குரங்கு, ெத்தமாக பாடும் பைறே, ஊதா நிை

    கண்கறள உறடய தேறள, ேிெித்திரமான ோறை, அற்புதமான பூக்கள்

    என 211 ேறகயிைான புதிய உயிாினங்கள் கண்டைியப்பட்டுள்ளன.

    கிைக்கு இமயமறையில் ெமீபத்தில் ஆய்வுகள் நடந்தன. இப்பகுதி

    'ஆெியாேின் அற்புதம்' என அறைக்கப்படுகிைது. இது, அாிய

    உயிாினங்களின் இடமாக திகழ்கிைது. இந்தியாேின் ேடகிைக்கு

    மாநிைங்கள் (அருணாெைப்பிரவதெம், ெிக்கிம், வமற்கு ேங்காளம்), பூடான்,

    வநபாளம், மியான்மர் மற்றும் சதற்கு திசபத் ஆகியறே இங்கு உள்ளன.

  • கடந்த 2009 முதல்- 2014 ேறர ஆராய்ச்ெி செய்த வபாது புதிய ேறக

    உயிாினங்கள் கண்டைியப்பட்டுள்ளன என இயற்றகக்கான

    உைகளாேிய நிதியம் (டபிள்யூ.டபிள்யூ.எப்.,) சதாிேித்துள்ளது.

    ஏற்கனவே 1998 முதல் 2008 ேறரயிைான காைத்தில் 354 ேறகயிைான

    உயிாினங்கள் கண்டைிப்பட்டன.

    பாம்பு தறை மீன்கள் :

    ென்னா ஆன்ட்ரா என்ை இவ்ேறக மீன்கள் நிைத்திலும் ோைக்கூடியறே.

    பாம்பு தறை சகாண்ட இந்த மீன்கள் சதாடர்ந்து 4 நாட்கள் நிைத்தில்

    ோழும். மற்ை ேிைங்குகளிடமிருந்து பதுங்கி ோழும். இறே வமற்கு ேங்க

    பகுதியில் காணப்படுகின்ைன.

    ேித்தியாெமான ோறை :

    இந்த புதிய ேறக ோறை மரத்தின் பூ, ொதாரண ேறைப் பூேில்

    ேித்தியாெமுறடயது. இதற்கு பிரபை 'ோறைப்பை' ேிஞ்ஞானி மர்க்கு

    ஹாக்கினன் என்போின் சபயர் சூட்டப்பட்டுள்ளது.

    மறைறய கணிக்கும் குரங்கு :

    "ஸ்னப்பி' என அறைக்கப்படும் இந்த குரங்கு தனது சுோெத்தின் மூைம்

    மறை ேருேறத முன் கூட்டிவய கணித்து ேிடும். மறையில் நறனந்தால்

    மனிதர்கறள வபாை தும்மும். இறத தேிர்ப்பதற்காக மறைக்காைங்களில்

    தனது தறைறய முைங்காவைாடு வெர்த்து றேத்துக்சகாள்ளும்.

    இது மியான்மர் பகுதியில் ோழ்கின்ைன. ஊதா நிை கண்களுறடய

    தேறள

    ெத்தமாக பாடும் பைறே

    சபண்கள் அணியும் தங்க நறககள் வபான்ை பாம்பு

  • *211 புதிய உயிாினங்கள் எறே

    *133 தாேர ேறககள்

    *26 மீன் ேறககள்

    *39 முதுசகலும்பில்ைாத உயிாினங்கள்

    *10 நீர் மற்றும் நிைத்தில் ோழும் உயிாினங்கள்

    *1 ஊர்ேன

    *1 பைறே

    *1 பாலுட்டி

    எத்தறன உயிாினங்கள்:

    * 10,000 தாேர ேறககள்

    * 977 பைறேயினங்கள் ோழ்கின்ைன.

    * 300 புலி, ெிறுத்றத உள்ளிட்ட பாலூட்டிகள்

    * 269 நன்னீாில் ோழும் மீன்ேறககள்

    * 176 ஊர்ந்து செல்பறே

    * 105 நீர் நிைத்தில் ோழ்பறே

    100: சுமார் 100 வகாடி மக்கள் பனிபடர்ந்த இமயமறைறய குடிநீருக்காக

    நம்பி உள்ளனர்.

    மரம் ேளர்ப்பு கட்டாயம்: கேர்னர் ேிருப்பம்

    சபங்களூரு: நிைம் தரும்வபாது, குைிப்பிட்ட பகுதியில் மரம் ேளர்ப்பறத

    கட்டாயமாக்க வேண்டும்,” என, கேர்னர் ேஜுபாய் ோைா

    சதாிேித்தார்.ேனத்துறை ொர்பில், சபங்களூாில் நடந்த, 'ேன ேிைங்குகள்

    பாதுகாப்பு' நிகழ்ச்ெிறய, கேர்னர் ேஜுபாய் ோைா துேக்கி

    றேத்தார்.அேர் வபெியதாேது:சபாிய சதாைிைதிபர்களுக்கு நிைம்

    தரப்படுகிைது. இந்த ெந்தர்ப்பத்தில், குைிப்பிட்ட இடத்தில் மரம் ேளர்க்க

  • வேண்டும் என்பறத கட்டாயமாக்க வேண்டும். இதனால் ேன

    சொத்துகள் சபருகும்.ேனத்றத பாதுகாக்கும் கடறமறய உணர்ந்து,

    மரம், செடிகறள மக்கள் பாதுகாக்க வேண்டும். ெட்டேிவராதமாக

    மரத்றத சேட்டுவோர் மீது நடேடிக்றக எடுக்க வேண்டும்.

    ேன மற்றும் ேன ேிைங்குகள் பாதுகாப்பு பற்ைியும் ேிைிப்புணர்வு ஏற்பட

    வேண்டும். மரம் ேளர்ப்பதில் உள்ளாட்ெி அறமப்புகள், சபாதுமக்களுக்கு

    ஊக்கமளிக்க வேண்டும்.குஜராத் மாநிைம் ராஜ்வகாட் வமயராக நான்

    இருந்தவபாது, மரம் ேளர்ப்வபாருக்கு சராக்க பணம் ேைங்கும் திட்டத்றத

    செயல்படுத்திவனன்.இவ்ோறு அேர் கூைினார்.ேனத்துறை அறமச்ெர்

    ரமாநாத்ராய் வபசுறகயில், “ேனங்கறள பாதுகாப்பதில் மக்களும்

    அரசுடன் றகவகார்க்க வேண்டும்,” என்ைார்.

    மறையால் அறணகளுக்கு நீர்ேரத்து அதிகாிப்பு

    மதுறர,:மதுறர, திண்டுக்கல், வதனி மாேட்டங்களில் ெிை நாட்களாக

    மறை சபய்ேதால் அறணகளின் நீர் மட்டம் உயர்ந்து

    ேருகிைது.மதுறரயில் அதிகபட்ெமாக புலிப்பட்டியில் வநற்று முன் தினம்

    35.4 மி.மீ., மறை பதிோனது.மறையளவு(மி.மீ.,) ேருமாறு: சபாியாறு

    அறண 4.4, வதக்கடி 2.6 உத்தமபாறளயம் 3.8, மருதாநதி 4.2 வபரறண

    13.4, குப்பணம்பட்டி7.4, ஆண்டிப்பட்டி 10 மதுறர 7, ொத்றதயாறு

    அறண 23 வமட்டுப்பட்டி 6.2, கள்ளந்திாி 18, ெிட்டம்பட்டி 5.2 வமலூர்24,

    தனியாமங்கைம்31, இறடயப்பட்டி 7.8 சகாறடக்கானல் 23.2

    என பதிோனது.

    அறணகளுக்கு நீர் ேரத்து: சபாியாறு அறண நீர்மட்டம் 116.80,

    நீர்ேரத்து ேிநாடிக்கு 713 கன அடி. சேளிவயற்ைம் 505 கன அடி. றேறக

    அறண நீர் மட்டம் 49.02 நீர் ேரத்து 440 கன அடி. சேளிவயற்ைம் 960

    கன அடி. மஞ்ெளாறு அறணக்கு நீர் ேரத்து 118 கன அடி. சேளிவயற்ைம்

    இல்றை.

    மருதாநதிக்கு நீர் ேரத்து 101 கன அடி. சேளிவயற்ைம் 90 கன அடி.

  • வொத்துப்பாறை அறணக்கு நீர் ேரத்து 03 கன அடி. சேளிவயற்ைம்

    03கன அடி.

    மன்னார் ேறளகுடா கடல்ேள பாதுகாப்பு கன்னியாகுமாி ேறர நீட்டிக்க

    முடிவு

    ராமநாதபுரம்:ராமநாதபுரம், துாத்துக்குடி மாேட்டங்களில் செயல்பட்டு

    ேரும் மன்னார் ேறளகுடா கடல்ேள பாதுகாப்பு திட்டத்றத,

    கன்னியாகுமாி ேறர நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    மன்னார் ேறளகுடா உயிர்க்வகாள காப்பகம் தனுஷ்வகாடியில் இருந்து

    கன்னியாகுமாி ேறர உள்ளது. இந்த காப்பகம் 10,500 ெதுர கி.மீ.,க்கு

    பரந்து ேிாிந்துள்ளது. இதில் 3,600 ேறகயான கடல்ோழ் உயிாினங்கள்

    காணப்படுகின்ைன.

    இதுவபான்ை உயாிய பல்உயிாின அடர்த்தி இந்தியாேில் வேறு எங்கும்

    இல்றை. இந்த உயிர்க்வகாளத்தில் 21 தீவுகளும் அறதச் சுற்ைியுள்ள

    பேளப்பாறைகள் அறமந்த 560 ெதுர கி.மீ., பகுதி வதெிய பூங்காோக

    உள்ளது.

    அைக்கட்டறள உருோக்கம்: இப்பகுதியில் சேடி றேத்து மீன் பிடித்தல்,

    தறட செய்யப்பட்ட ேறைகறள பயன்படுத்துதல், இழுேறை பயன்பாடு,

    மாசுப்படுத்துதல் வபான்ைேற்ைால் அாிய ேறக கடல் ேளங்கறள

    பாதிப்புக்குள்ளாகின்ைன. இதறன தடுக்க 2002 ல் ஐ.நா., நிதியுதேியுடன்

    மன்னார் ேறளகுடா உயிர்க்வகாள காப்பக அைக்கட்டறள

    உருோக்கப்பட்டது. இந்த அைக்கட்டறள மூைம் மன்னார் ேறளகுடா

    கடல்ேள பாதுகாப்பு மற்றும் கடல்ொர் மீனேர் வமம்பாட்டு திட்டம்

    செயல்படுத்தப்பட்டு ேருகிைது. 2012 க்கு பின் ஐ.நா., நிதியுதேிறய

    நிறுத்தியது. இறதயடுத்து தமிைக அரசு அைக்கட்டறளக்கு நிதி ஒதுக்கி

    ேருகிைது.

    இந்த அைக்கட்டறள ராமநாதபுரம் மாேட்டம் தனுஷ்வகாடியில் இருந்து

    துாத்துக்குடி மாேட்டம் சபாியதாறள ேறர உள்ள 248 கிராமங்களில்

    மீனேர்களுக்கு மாற்றுத்சதாைிலுக்கு வதறேயான நிதிறய ேைங்குகிைது.

  • வமலும் கடல்ேள ேிைிப்புணர்றே ஏற்படுத்தி ேருகிைது. தற்வபாது இந்த

    திட்டத்றத துாத்துக்குடி மாேட்டத்தில் இருந்து கன்னியாகுமாி மாேட்டம்

    ேறர நீட்டிக்க தமிைகஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வுகள்

    நடக்கின்ைன.

    சமகா மீன் கண்காட்ெி ராமநாதபுரத்தில் துேக்கம்

    ராமநாதபுரம்,: ேனஉயிாின ோரேிைாறேசயாட்டி மன்னார் ேறளகுடா

    உயிர்க்வகாள காப்பக அைக்கட்டறள ொர்பில் ராமநாதபுரத்தில் சமகா

    கடல்ோழ் உயிாினங்களின் கண்காட்ெி துேங்கியது.

    மன்னார் ேறளகுடா உயிர்க்வகாள காப்பகத்தில் மீன்கள் உட்பட 3,600

    கடல்ோழ் உயிாினங்கள் உள்ளன. இதில் 54 உயிாினங்கள் அாிய ேறக.

    ேனஉயிாின ோரேிைாறேசயாட்டி கடல்ோழ் உயிாினங்கள் குைித்து

    ேிைிப்புணர்வு ஏற்படுத்தும் ேறகயில் ராமநாதபுரம் முகமதுெதக் தஸ்தகீர்

    ஆெிாியர் பயிற்ெி பள்ளியில் சமகா கண்காட்ெி வநற்று துேங்கியது.

    கசைக்டர் நந்தகுமார் துேக்கி றேத்தார். மயில்ோகனன் எஸ்.பி.,

    அைக்கட்டறள இயக்குனர் டாங்வக, சுற்றுச்சூைல் ேளர்ச்ெி அலுேைர்

    ொகுல்அமீது பங்வகற்ைனர்.

    இதில் கடல் பசு, ஆவுலியா, அலுங்காறம, ஓங்கிகள், சபருந்தறை ஆறம,

    பால் சுைா, கங்றக சுைா, வேளாமீன், சேள்ளசுைா, ெவுக்கு திருக்றக,

  • கடல் அட்றடகள், கடல் பஞ்சு வபான்ைேற்ைின் பதப்படுத்தப்பட்ட

    மாதிாிகள் மற்றும் யாறனக்றக, ோறைப்பூ ெங்கு, தேறள ெங்கு, சபாிய

    மட்டி, செம்பட வொேி, பழுப்பு புள்ளி வொேி, மூோி வொேி, ோி ெங்கு,

    குதிறர முள்ளி உள்ளிட்டறே றேக்கப்பட்டிருந்தன. வமலும் 30 க்கும்

    வமற்பட்ட கடல்நீர் சதாட்டிகளில் ேறக, ேறகயான உயிருள்ள மீன்கள்

    பார்ப்வபாறர சுண்டியிழுக்கும் ேறகயில் இருந்தன. இந்த கண்காட்ெி

    நாறள ேறர நடக்கிைது.

    துணிந்தால் துணிப்றபயும் துறணயாகும்: ஆெிாிறயயின் தூய்றம பணி

    ''அன்றன நம் பூமிறய மாொக மாற்ைிவனாம், தாயான உன்றனத் தான்

    தாிொக மாற்ைிவனாம்'' கு.நாட்டாப்பட்டி ஊராட்ெி ஒன்ைிய பள்ளி

    மாணேர்கள் பாடும் பாட்டு தான் இது. சுற்றுச் சூைறை பாதுாக்கும்

    பணியில் ஈடுபடும் மாணேர்கள், பூமித் தாயின் வமல் பாெம் சகாண்டு

    எழுதிய பாடல் ோிகள் தான் இறே.

    மாணேர்கறள சுற்றுச்சூைல் ஆர்ேைராக மாற்ைிய பள்ளியின் தமிழ்

    ஆெிாிறய அைவமைம்மாள் கூைியதாேது: பாடம் நடத்தும் வபாது,

  • மாணேர்களிடம் சுற்றுச்சூைல் பாதுகாப்பு குைித்து நிறைய வபசுவேன்.

    தறைறம ஆெிாியர் முத்றதயா ேைிகாட்டுதல் படி, மாணேர்கள்,

    சபண்கள், நண்பர்களுடன் இறணந்து 'அப்துல் கைாமின் ெிைகுகள்'

    என்ை, அறமப்றப துேங்கியுள்வளாம்.ோழ்க்றக கல்ேி ேகுப்பில்

    மாணேர்களுக்கு, வீட்டில் வீணாக கிடக்கும் ஆறடகறள சகாண்டு றக

    றபகள்தயாாிக்க பயிற்ெி சகாடுத்துள்வளாம். மாணேர்கள் பாலிதீன்

    றபகளின் தீறமகள் குைித்து எடுத்துக்கூைி, கு.நாட்டாப்பட்டி கிராம

    கறடகளில் இந்த துணிப் றபகறள சகாடுத்து ேிைிப்புணர்வு ஏற்படுத்தி

    ேருகின்ைனர். ஏசனன்ைால் நாம் பரேைாக செயற்றக இறை

    ஆறடகறள தான் அணிகிவைாம். இதுவும் பாலிதீன் வபாை மக்காத

    தன்றமயுறடயது. அதனால் தான் இந்த துணிகறள மறுபயன்பாட்டிற்கு

    மாற்ைி ேருகிவைாம். துணிந்தால் துணிப்றபயும் துாய்றமக்கு

    துறணயாகும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று சொல்ைைாம்.அவத

    வபால், பாலிதீன் றபகறள நாம் பயன்படுத்திய பின் குப்றபத்

    சதாட்டியில் வபாடக் கூடாது, வொப்பு தண்ணீாில் நன்ைாக கழுேி

    சமாத்தமாக வெர்த்து றேத்து எறடக்கு சகாடுத்தால் அேர்கள்

    மறுசுைற்ெிக்கு அனுப்பி ேிடுோர்கள். பை கிராமங்களில் எங்கள்

    சுற்றுச்சூைல் பணிறய துேங்க இருக்கிவைாம், என்ைார்.

    தமிைகம், புதுச்வொியில் மறை சதாடரும்

    சென்றன : ேங்கக் கடலில் உருோகி உள்ள குறைந்த காற்ைழுத்த

    தாழ்வுநிறை காரணமாக தமிைகம் மற்றும் புதுச்வொியில் அடுத்த 48 மணி

    வநரத்திற்கு கனமறை சபய்யும் என சென்றன ோனிறை ஆய்வு றமயம்

    சதாிேித்துள்ளது. கடந்த ெிை நாட்களாக தமிைகத்தின் பை பகுதிகளில்

    பரேைாக மறை சபய்து ேருேது குைிப்பிடத்தக்கது.

    பறன சபாருள் உற்பத்தி ரூ.14 வகாடிக்கு இைக்கு

  • சென்றன:நடப்பு ஆண்டில், 14 வகாடி ரூபாய்க்கு பறன சபாருட்கறள

    உற்பத்தி செய்ய, பறன சபாருள் ேளர்ச்ெி ோாியம் இைக்கு

    நிர்ணயித்துள்ளது.இந்தியாேில் முதன்முறையாக, பறன சதாைிலுக்கு

    என, தமிைகத்தில் பறன சபாருள் ேளர்ச்ெி ோாியம், 1994ல்

    துேக்கப்பட்டது. இதன்கீழ், 731 ஆரம்ப கூட்டுைவு ெங்கங்கள், எட்டு

    மாேட்ட கூட்டுைவு ெம்வமளனங்கள், ஒரு மாநிை கூட்டுைவு இறணயம்

    இருக்கின்ைன.

    பறன சதாைிைாளர்களுக்கு உபகரணங்கள் ேைங்குேது; பறன சபாருள்

    உற்பத்தி மற்றும் ேிற்பறன ஆகியேற்றை ோாியம் செய்கிைது. நடப்பு

    ஆண்டில், 14 வகாடி ரூபாய் மதிப்பில், பறன சபாருள் உற்பத்தி செய்ய,

    இைக்கு நிர்ணயித்துள்ளது.

    இதுபற்ைி, அதிகாாிகள் கூைியதாேது: கடந்த ஆண்டில், 8,800 வபருக்கு

    பதநீர் இைக்க உாிமம் ேைங்கப்பட்டது. அரசு ேைங்கிய, 26 ைட்ெம் ரூபாய்

    மானியம் மூைம், உபகரணங்கள் ேைங்கப்பட்டுள்ளன. 12 வகாடி

    ரூபாய்க்கு, பறன சபாருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, 14 வகாடி

    ரூபாய்க்கு ேிற்கப்பட்டது. இவ்ோறு அதிகாாிகள் கூைினர்.

    ேிேொயிகறள ேல்ைறமபடுத்தும் வபரணி கசைக்டர் ேல்ைேன் துேக்கி

    றேத்தார்

    காறரக்கால்: காறரக்காலில் ேலிறமமிகு பாரதம் பறடப்பதற்காக,

    ேிேொயிகறள ேல்ைறமபடுத்தும் அகிை இந்திய வபரணிறய கசைக்டர்

    ேல்ைேன் துேக்கிறேத்தார்.காறரக்கால் தாவீது பிள்றள வீதியில்

    உள்ள பிரஜாபிதா பிரம்மாகுமாாிகள் ஈஸ்ோிய ேிஷ்ே ேித்யாையம்

    ொர்பில், துாய்றமயான, சபான்னான, ேலிறமமிகு பாரதத்றத

    உருோக்க, ேிேொயிகறள ேல்ைறம படுத்தும் வபரணிக்கு ஏற்பாடு

    செய்யப் பட்டது.இப் வபரணிறய, கசைக்டர் ேல்ைேன் துேக்கி

    றேத்தார். கூடுதல் வேளாண் இயக்குனர் மதியைகன், வகாேில்பட்டி

  • ராஜவயாக தியான ஆெிாிறய செல்ேி ஆகிவயார் முன்னிறை ேகித்தனர்.

    இப்வபரணி, 7ம் வததி முதல் ேரும் 13ம் வததி ேறர காறரக்காலில்

    மாேட்டம் முழுேதும், வயாகமுறை ேிேொயத்தின் மூைம் ெத்துமிக்க

    உணவுப்சபாருட்கறள உற்பத்தி செய்ய ேைிகாட்டுதல், ஆன்மிக

    ஞானத்தினால் ேிேொயிகறள மூடநம்பிக்றக, தீய பைக்கங்களிலிருந்து

    ேிடுேித்தல், குறைந்த செைேில் அதிக ேிறளச்ெல் சபறுதல், எளிய முறை

    தியானத்தின் மூைம் வநர்மறை ெிந்தறனகறள உருோக்குதல்,

    சுற்றுப்புைத்றத துாய்றமப்படுத்துதல் உள்ளிட்டேற்றை ேலியுறுத்தி இப்

    வபரணி வமற்சகாள்ளப்படுகிைது. இந்நிகழ்ச்ெியில் 100க்கு வமற்பட்ட

    பிரம்மா குமாாிகள் கைந்து சகாண்டனர்.

    செண்டுமல்லி செடிகள் அழுகியதால் இைப்பு!ேிறையும் குறைந்ததால்

    வேதறன

    சபாள்ளாச்ெி: சதாடர் மறையில், செடிகள் அழுகியதால் 'செண்டுமல்லி'

    ொகுபடியாளர்கள் சபரும் இைப்றப ெந்தித்துள்ளனர்.

    சதாடர் ேருமானத்றத எதிர்பார்க்கும் ேிேொயிகள், நிரந்த ொகுபடி

    பயிர்கவளாடு, குறுகிய காை ைாப வநாக்கிைான பயிர்கறளயும் பயிாிட்டு

    ேருகின்ைனர். இன்றைய நிறையில், தக்காளி ொகுபடிறய முக்கிய

    பயிராக ேிேொயிகள் வமற்சகாண்டுள்ளனர். அடுத்தபடியாக பந்தல்

    ொகுபடி காய்கைிகளான பாகல், பீர்க்கன் மற்றும் புடறை ொகுபடி

    அதிகமாக வமற்சகாள்ளப்படுகிைது. ஒரு ெிை ேிேொயிகள், தங்கள்

    நிைத்தின் ஒரு பகுதிறய நிரந்தர மைர் ொகுபடிக்கு ஒதுக்கியுள்ளனர்.

    சபாள்ளாச்ெியின் வமற்கு பகுதியில், ெிை ேிேொயிகள் மைர் ொகுபடிறய

    வமற்சகாண்டுள்ளனர். கடந்த ெிை நாட்களாக, வகரள எல்றைவயாரம்,

    அவ்ேப்வபாது பைத்த மறை சபய்து ேருகிைது.

    இதனால், ொகுபடி நிைத்தில் இன்னும் கூட மறை நீர் வதங்கியுள்ளது.

  • இதனால், இந்நிைத்தில் கால்றேக்க முடியாத நிறை ஏற்பட்டுள்ளது.

    இம்மறை சதன்றன மற்றும் பயிர் ேிறளச்ெலுக்கு ஏற்ைது என்ைாலும்,

    மைர் ொகுபடிக்கு இது உகந்ததல்ை. மாப்பிள்றளகவுண்டனுாாில் ொகுபடி

    செய்யப்பட்ட செண்டு மல்லி பூக்கள் சதாடர் மறையால் பாதிக்கப்பட்டு,

    சபாலிறே இைந்துள்ளது. செடியும் அழுகியுள்ளது. இதனால், அடுத்து

    ேரும் ைாபத்றத இைந்த நிறையிலும், பூக்கறள பைிக்காமல்

    ேிட்டுள்ளார்.

    'கிவைா ரூ.25க்கு ேிற்கிைது' ேிேொயி சபான்ராஜ் கூைியதாேது: கடந்த,

    15 ஆண்டுகளாக மைர் ொகுபடி வமற்சகாண்டுள்வளன். ஆைாந்துறை

    பகுதியில் இருந்து நாற்று ோங்கப்படுகிைது. நடப்பு ஆண்டில், சதன்றன

    ொகுபடிக்கிறடயில் ஒரு ஏக்காில் நடவு செய்யப்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் நல்ை ேிறை கிறடத்தது. ஓணம் வநரத்தில் கிவைா, 70

    ரூபாய் ேறர ேிற்பறனயானது. தற்வபாது, கிவைா, 25 ரூபாய்க்கு

    ேிற்கிைது. ெமீபத்தில் சபய்த சதாடர் மறையால் பூக்கள் பைிக்க

    முடியேில்றை. இதனால் பூக்கள் சபாலிேிைந்து, கருகி ேிட்டன. மறை நீர்

    வதங்கியதால் செடிகளும் அழுகும் நிறைக்கு ேந்து ேிட்டன. ஏைக்குறைய,

    30 ஆயிரம் ரூபாய் ேறர இைப்பு ஏற்பட்டுேிட்டது. ஆனாலும், நான்கு

    மாத பயிரான செண்டுமல்லி ேரும் ஜூன், ஜூறையில் மீண்டும் நடவு

    செய்யப்படும் இவ்ோறு அேர் கூைினார்.

    சநல் ேிறை உயர்ோல் அாிெி ேிறை எகிறும் அபாயம்: சநல்லுக்கான

    ஆதார ேிறை அதிகாிப்பு எதிசராலி

    வெைம்: ''தமிைக அரசு, சநல்லுக்கான ஆதார ேிறைறய அதிகாிப்பு

    செய்துள்ள நிறையில், கர்நாடகாேிலும் சநல் ேிறை உயர்ந்துள்ளதால்,

    தமிைகத்தில் அாிெி ேிறையில் உயர்வு ஏற்படும்,'' என, தமிைக சநல் அாிெி

    ேணிக ெம்வமளன, மாநிை முன்னாள் துறணத் தறைேர் ெியாமளநாதன்

    சதாிேித்தார்.

  • இது குைித்து அேர் கூைியதாேது: தமிைக அரசு சநல்லுக்கான ஆதார

    சகாள்முதல் ேிறைறய, வமாட்டா ரகத்துக்கு கிவைா, 13.50 ரூபாயில்

    இருந்து, 14.60 ரூபாயாகவும், ென்ன ரகத்துக்கு, 14.10 ரூபாயில் இருந்து,

    15.10 ரூபாயாக அதிகாித்துள்ளது. இந்த ேிறை உயர்வு தமிைகத்தில்,

    சநல் அறுேறட துேங்கும் நேம்பர் மாதத்தில் அமலுக்கு ேரும்

    நிறையில், அந்த சநல்றை ோங்கி அாிெியாக மாற்றும் நிறையில்,

    அாிெியின் குறைந்த பட்ெ ேிறை கிவைாவுக்கு, 28 ரூபாயில் இருந்து, 30

    ரூபாயாக உயர்ந்து ேிட ோய்ப்புள்ளது. மத்திய அரசு ேடமாநிைங்களில்

    இருந்து ரயில் மூைம் சகாண்டு ேரப்படும் சநல்லுக்கான ோடறக

    கட்டணத்தில், 6.45 ெதவீதம் ேறர உயர்த்தி உள்ளது. சநல்றை ோங்கும்

    வபாது, பிை செைவுகறளயும், அதன் மீது வெர்க்கும் பட்ெத்தில், அாிெியின்

    குறைந்த பட்ெ ேிறை, 40 ரூபாய் என்ை நிறைறய எட்டி ேிடும்.

    கர்நாடகாேில் இருந்து தமிைகத்துக்கு ேிற்பறனக்கு ேந்து சகாண்டு

    இருக்கும், வக.டீைக்ஸ் சநல் கிவைா, 24 ரூபாயில் இருந்து, 27

    ரூபாயாகவும், காவோி வொனா சநல் கிவைா, 15 ரூபாயில் இருந்து, 22

    ரூபாயாக ேிறை அதிகாித்துள்ளது. தமிைகத்தில் ேிறளயும், பி.பி.டி.,

    (பாபத்ைால் சபான்னி) சநல் கிவைா, 19 ரூபாயில் இருந்து, 25

    ரூபாயகவும், சேள்றளப் சபான்னி கிவைா, 25 ரூபாயில் இருந்து, 28.60

    ரூபாயாக உயர்ந்துள்ளது. சநல்லின் ேிறை, கிவைா, 3 ரூபாயில் இருந்து,

    6 ரூபாய் ேறர, அதிகாித்துள்ளது. இந்த சநல்றை ோங்கி அாிெியாக

    உற்பத்தி செய்து, ேிற்பறனக்கு சகாண்டு ேரும் நிறையில், ஒவ்சோரு

    ரக அாிெியின் ேிறையிலும், கிவைாவுக்கு, 3 ரூபாய் முதல், 5 ரூபாய்

    ேறரயில் உயர ோய்ப்புள்ளது. இந்த உயர்வு, இன்னும் ஒரு ோரத்தில்

    அமலுக்கு ேந்தாலும், ஆச்ொியப்படுேதற்கு இல்றை. இவ்ோறு, அேர்

    கூைினார். சநல் ேிறையில் ஏற்பட்டுள்ள உயர்வு, அாிெி ேிறையில்,

    எதிசராலிக்கும் பட்ெத்தில், அறனத்து ரக அாிெி ேிறையிலும்,

  • கிவைாவுக்கு, இரண்டு ரூபாய் முதல், மூன்று ரூபாய் ேறர ேிறை உயர்வு

    ஏற்படும்.

    வநற்றைய அாிெி ேிறை நிைேரம்: சேள்றள சபான்னி (பைசு) கிவைா

    ரூ.53, சேள்றள சபான்னி (புதுசு) கிவைா ரூ.49, கர்நாடகா சபான்னி

    கிவைா ரூ.45, கர்நாடகா டீைக்ஸ் கிவைா ரூ.39, பி.பி.டி., (பாபத்ைால்

    சபான்னி) ரூ.43, இட்லி கார் முதல் தரம் கிவைா ரூ.41, இட்லி கார் தரம் 2

    கிவைா ரூ.38, இட்லி கார் சநாய் (குருறண) கிவைா ரூ.35, ஐ.ஆர்.20

    கிவைா ரூ.30, பச்றெ சபான்னி அாிெி கிவைா ரூ.49, 2 தரம் கிவைா 47, 3

    தரம் கிவைா ரூ.45 என ேிற்பறனயானது.

    முறளப்பு திைன் இல்ைாத 7 டன் வொளம்: திருப்பி அனுப்ப அதிகாாிகள்

    முடிவு

    ஈவராடு: முறளப்பு திைன் இல்ைாத, 7 டன் வொளத்றத, திருப்பி அனுப்ப

    கால்நறடத்துறை அதிகாாிகள் முடிவு செய்துள்ளதாக, ஈவராடு கால்நறட

    பராமாிப்பு துறை மண்டை இறண இயக்குனர் பைனிொமி சதாிேித்தார்.

    ஈவராடு மாேட்டத்தில், 65 ெதவீதத்துக்கும் வமற்பட்டேர்கள், ேிேொயம்

    மற்றும் கால்நறட ேளர்ப்பு சதாைில்களில் ஈடுபட்டு ேருகின்ைனர்.

    மாேட்டம் முழுேதும், 3 ைட்ெத்து, 79,700 கால்நறடகள் உள்ளன.

    வமலும், 4 ைட்ெத்து, 74,000 சேள்ளாடு மற்றும் செம்மைி ஆடுகள்

    உள்ளன. கால்நறடகளின் உற்பத்தி திைனுக்கு தீேனம் மற்றும்

    பசுந்தீேனம் முக்கியமானதாக உள்ளது. கால்நறடகளுக்கு தீேன

    பற்ைாக்குறைறய வபாக்கும் ேிதத்திலும், ேிேொயிகறள வமம்படுத்தும்

    ேறகயிலும், தமிைக அரசு கடந்த நான்காண்டாக, மாநிை தீேன

    அபிேிருத்தி திட்டத்றத செயல்படுத்தி ேருகிைது. இந்நிறையில் மாநிை

    தீேன அபிேிருத்தி திட்டத்தின் கீழ், தமிைக அரசு, ஈவராடு கால்நறட

    பராமாிப்புத்துறை மூைம், 2,500 ஏக்கருக்கு, 2,692 பயனாளிகளுக்கு

    வொளம் இைேெமாக மானியத்தில் ேைங்க உள்ளது.

  • இது குைித்து மண்டை இறண இயக்குனர் பைனிொமி கூைியதாேது:

    ஒவ்சோரு ஏக்கருக்கும், பயனாளிகளுக்கு, 12 கிவைா வொளம்

    ேைங்கப்படும். தற்வபாது ஈவராடு, வகாபி பகுதியில் பயனாளிகளுக்கு

    ேைங்க, 30 டன் வொளம், ஈவராடு கால்நறட பராமாிப்புத்துறைக்கு

    ேந்துள்ளது. அதில், வகாபி பகுதிக்கு, 18.6 டன்னும், ஈவராடு

    ேட்டாரத்துக்கு, 11.4 டன்னும் ேைங்கப்படும். வகாபியில் இதுேறர, 10

    டன்னுக்கு வமல் வொளம் ேைங்கபட்டது. இந்த வொளத்றத வொதித்து

    பார்த்தவபாது, அதில், ஏழு டன் வொளம் முறளப்பு திைன் இல்ைாதறத

    கண்டு, அதிகாாிகள் அதிர்ச்ெியறடந்தனர். வமலும் அந்த வொளத்றத

    பாிவொதறன கூடத்துக்கு அனுப்பி உள்ளனர். பாிவொதறனயில் உறுதி

    செய்யப்பட்டால், ஏழு டன் வொளம் திருப்பி அனுப்பி றேக்கப்படும்.

    இவ்ோறு, அேர் கூைினார்.

    குறுறே சநல் சகாள்முதல் செய்ய சகாள்முதல் நிறையங்கள் திைப்பு

    திருச்ெி: திருச்ெியில், குறுறே சநல் அறுேறட ெீஸன் துேங்கியுள்ளதால்,

    மாேட்டத்தில், துறையூர், ைால்குடி தாலுகாக்களில், வநரடி சநல்

    சகாள்முதல் நிறையங்கள், வநற்று திைக்கப்பட்டன.

    திருச்ெி மாேட்டத்தில், மண்ணச்ெநல்லூர், ைால்குடி, துறையூர், முெிைி

    உள்ளிட்ட பகுதிகளில், 2,00க்கும் வமற்பட்ட ஏக்காில் குறுறே சநல்

    ொகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில், ைால்குடிறய அடுத்த

    டி.கல்ேிக்குடி, வக.ேி. வபட்றட, ஆைங்குடி, மகாஜனம் உள்ளிட்ட

    பகுதிகளில் உள்ள, 100க்கும் வமற்பட்ட ஏக்காில் ொகுபடி செய்யப்பட்ட

    குறுறே சநல் அறுேறட துேங்கியுள்ளது. இந்நிறையில், மாேட்ட

    முழுேதும் சநல் சகாள்முதல் நிறையங்கறள திைக்க மாேட்ட நிர்ோகம்

    நடேடிக்றக எடுக்கப்பட்டது. அதன்படி, ைால்குடி தாலுகாேில்,

    அபிவேகபுரம், அன்பில், அாியூர், கல்ேிக்குடி, செம்பறர, திண்ணியம்,

  • நகர், பூோளூர் ஆகிய இடங்களிலும், துறையூர் தாலுகாேில், டி.வமட்டூர்,

    ஆைந்துறடயான்பட்டி ஆகிய இடங்களிலும் வநரடி சநல் சகாள்முதல்

    நிறையங்கள், வநற்று திைக்கப்பட்டுள்ளன. 'இந்த சகாள்முதல்

    நிறையங்களில், ென்ன ரகம் ஒரு குேிண்டாலுக்கு, 1,520 ரூபாயும், சபாது

    ரகம் ஒரு குேிண்டாலுக்கு, 1,460 ரூபாயும் ேைங்கப்படும்' என, மாேட்ட

    நிர்ோகம் அைிேித்துள்ளது.

    கருவேை மரங்கறள சேட்டுேதற்கு அனுமதிக்க கவுன்ெிைர் ேலியுறுத்தல்

    நிைக்வகாட்றட : ெீறமக் கருவேை மரங்கறள சேட்டுேதற்கு மாேட்ட

    நிர்ோகத்தின் அனுமதி சபற்றுத் தர வேண்டும் என வபரூராட்ெி

    கவுன்ெிைர்கள் கூட்டத்தில் வேண்டுவகாள் றேக்கப்பட்டது.

    நிைக்வகாட்றட வபரூராட்ெி கவுன்ெிைர்கள் கூட்டம் தறைேர் வெகர்

    தறைறமயில் நடந்தது. துறண தறைேர் ெதீஸ்குமார் முன்னிறை

    ேகித்தார். செயல்அலுேைர் முருவகென் ேரவேற்ைார். ோர்டு பகுதிகளில்

    நிறைவேற்ை வேண்டிய ேளர்ச்ெிப் பணிகள் குைித்து தீர்மானங்கள்

    நிறைவேற்ைப்பட்டன.

    வஜாெப்(11ேது ோர்டு): ெீறமக்கருவேை மரங்கறள அகற்றுேதற்கு

    மாேட்ட அனுமதி சபற்றுத்தர வேண்டும்.

    தறைேர்: அனுமதி சபறுேதற்கு முயற்ெி செய்வோம். அகற்றுேதற்கான

    செைவு யார் செய்ேது?வஜாெப்: இதற்சகன இயக்கம் ஒன்று

    செயல்படுகிைது. அேர்கள் செைேிவைவய மரங்கறள அகற்ைி ேிடுேர்.

    வதறேசயன்ைால் வேறு மரக்கன்றுகறள நடவு செய்து

    சகாடுப்பர்.தறைேர்: புதிதாக வீடு கட்ட அனுமதி வகட்வபாாிடம்

    கண்டிப்பாக 2 மரங்கள் ேளர்க்க வேண்டும் என ேலியுறுத்த வேண்டும்.

    பட்டம்(15ேது ோர்டு): பறைய வீட்றட புதுப்பிப்பேர்களிடம் வகட்க

    முடியாது.

  • தறைேர்: சுற்றுச்சூைறை காப்பதில் சபாதுமக்களுக்கு அக்கறை

    இருக்கிைது. மரம் நடுேதற்கு ஒத்துறைப்பு தருோர்கள்.

    முருவகென்(1ேது ோர்டு): ேள்ளி நகாில் துப்பரவு பணியாளர்கள்

    ேெிக்கின்ைனர். அங்கு சதருக்களில் தார் அல்ைது ெிசமன்ட் வராடு

    அறமக்க நான்கு கூட்டங்களில் ேலியுறுத்துகிவைன். ஒரு பணி கூட

    வதர்வு செய்யேில்றை.

    செயல்அலுேைர்: ேரும் கூட்டத்தில் நீங்கள் கூறும் வகாாிக்றக நிறைவு

    செய்யப்படும்.

    கூட்டம் முடியும் தறுோயில் 10ேது ோர்டு மணியக்காரன்பட்டிறயச்

    வெர்ந்தேர்கள் தறைோிடம் குடிநீறர ெீராக ேைங்க வேண்டும், என்ைனர்.

    உடனடியாக மணியக்காரன்பட்டிக்கு குடிநீர் ேினிவயாகம் செய்பேர்கள்

    அனுப்பி றேக்கப்பட்டனர்.

    திராட்றெயில் செேட்றடவநாய் தாக்கும் ோய்ப்புகள் அதிகம்

    கம்பம்:கம்பம் பள்ளத்தாக்கில் ொகுபடி செய்யப்பட்டுள்ள திராட்றெயில்

    செேட்றட வநாய் தாக்குேதற்கான ோய்ப்புகள் அதிகமாக உள்ளன என

    திராட்றெ ஆராய்ச்ெி நிறையம் எச்ொித்துள்ளது.

    கம்பம் ஆறனமறையன்பட்டி திராட்றெ ஆராய்ச்ெிநிறைய வபராெிாியர்

    பார்த்திபன், உதேி வபராெிாியர் சுப்றபயா கூைியதாேது:

    கம்பம் பள்ளத்தாக்கில் ொகுபடி செய்யப்பட்டுள்ள திராட்றெயில்

    செேட்றட வநாய் தாக்குேதற்கான ோய்ப்புகள் உள்ளது. இதறன தடுக்க

    புதிதாக கோத்து அடித்த வதாட்டங்களில் கீழ்வநாக்கி ேளர்ந்திருக்கும்

    தண்டுகளில் செேட்றட வநாய் பரப்பும் பூஞ்ொன்கள் இருக்கும். அேற்றை

    எடுத்து ேிட வேண்டும். அடிஇறைகறள எடுத்து நன்கு காற்வைாட்டம்

    இருக்குமாறு செய்ய வேண்டும். அத்வதாடு கர்வெட் 1.5 கிராம் ஒரு லிட்டர்

    தண்ணீருடன் அல்ைது சமட்டாைாெில் வமங்வகாசெப் 2 கிராம் ஒரு

  • லிட்டர் தண்ணீருடன் அல்ைது அொக்ாி ஸ்வடாடி 5 மில்லி ஒரு லிட்டர்

    தண்ணீருடன் கைந்து சதளிக்க வேண்டும்.

    செேட்றட வநாய் தாக்கியிருக்கும் பட்ெத்தில் ேிேொயிகள் திராட்றெ

    ஆராய்ச்ெி நிறையத்றத சதாடர்பு சகாண்டு ஆவைாெறனகள் சபைைாம்

    என்றும் கூைியுள்ளனர்.

    சேற்ைிறை பயிாிடும் ேிேொயிகளுக்கு சுைல் நிதி கடன் ேைங்க

    வகாாிக்றக

    வதனி:சேற்ைிறை பயிாிடும் ெிறு ேிேொயிகளுக்கு சுைல்நிதி கடன் ேைங்க

    வேண்டும் என ேிேொயிகள் வகாாிக்றக ேிடுத்துள்ளனர்.

    வதனி மாேட்டத்தில் சபாியகுளம், உத்தமபாறளயம் தாலுகாக்களில்

    அதிகளேில் ேிேொயிகள் சேற்ைிறை ொகுபடி செய்கின்ைனர். பை

    ஆண்டுகளாக சேற்ைிறையில் ோடல் வநாய் பாதிப்பு ஏற்பட்டு

    மீள முடியாமல் தேிக்கின்ைனர். சேற்ைிறை ொகுபடிக்காக ேட்டிக்கு

    ோங்கி ொகுபடி செய்து பயிர் ஒரு ஆண்டு ேளர்ந்த நிறையில் மகசூல்

    சபறுேதற்கு முன்வப ோடல் வநாய் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு

    ேிடுகின்ைனர். கடன், ேட்டியிறன முறையாக செலுத்த முடியாமல்,

    கடனில் இருந்து மீள முடியாமல் பைர் கிராமங்கறள ேிட்டு காலி

    செய்துள்ளனர்.

    சேற்ைிறை ொகுபடிறய தனி ஒரு ேிேொயி மட்டும் செய்ய முடியாது.

    குறைந்த பட்ெம் 15 ெிறு ேிேொயிகள் வெர்ந்து ஒவ்சோருேரும் ரூ.3

    ைட்ெம் வீதம் முதலீடு செய்தால் தான் சேற்ைிறை ொகுபடி செய்ய

    முடியும். இவ்ேளவு முதலீடு செய்து ோடல் வநாய் பாதித்தால் 15

    ேிேொயிகளும் நஷ்டமறடயும் நிறை ஏற்படும்.

    மகளிர் சுய உதேிக்குழு, ஆண்கள் சுய உதேிக் குழுேினருக்கு அரசு சுைல்

    நிதி, சபருங்கடன் ேைங்குேது வபால் சேற்ைிறை ேிேொயிகறள

    குழுோக அங்கீகாித்து அேர்களுக்கு குறைந்த ேட்டியில்

  • சுைல்நிதி,குறுகிய காை கடனுதேி, நீண்டகாை கடனுதேி திட்டங்களில்

    கடன் ேைங்கினால் சேற்ைிறை ேிேொயிகளுக்கு உதேியாக இருக்கும்.

    வமலும் சேற்ைிறை அறுேறடக்கு ேரும்வபாது கடறன திருப்பி

    செலுத்துேதில் உத்திரோதம் ஏற்படும்.

    சேற்ைிறை மருத்துே குணம் ோய்த்துள்ளதால் இதறன மதிப்பு கூட்டி

    மருந்து சபாருளாக மாற்ைிட ஆராய்ச்ெிகள் செய்து மருந்து சபாருளாக

    ேிற்பறனக்கு சகாண்டு ேரவேண்டும் என சேற்ைிறை ேிேொயிகள்

    அரசுக்கு வகாாிக்றக றேத்துள்ளனர்.

    பை ேறக மரங்கள் நடுேதற்கு இதுவே தருணம்!

    பை ேறக மரங்கறள வீடுகளிலும், வதாட்டங்களிலும் ேளர்ப்பதால்

    சுற்றுச்சூைல் பாதுகாக்கப்படுேதுடன் ெத்தான கனி ேறககள்

    கிறடக்கின்ைன. எனவே, பருே மறை சதாடங்கவுள்ள இத்தருணத்தில்

    பை மரங்கள் நடவுசெய்ய வதாட்டக்கறைத் துறை ஆவைாெறன

    சதாிேித்துள்ளது.

    இதுசதாடர்பாக வெரன்மகாவதேி வதாட்டக்கறைத் துறை உதேி

    இயக்குநர் தி.சு. பாைசுப்பிரமணியன் சேளியிட்ட செய்திக்குைிப்பு:

    மா மரம்: ோிறெக்கு ோிறெ 7 - 10 மீ, செடிக்கு செடி 7 - 10 மீ

    இறடசேளியில் நடவு செய்யைாம். அடர் நடவு முறையானால்

    ோிறெக்கு ோிறெ 5 மீ, செடிக்கு செடி 5 மீ இறடசேளி ேிட்டு நடவு

    செய்யைாம். 3 அடிக்கு 3 அடிக்கு 3 அடி என்ை அளேில் எடுக்கப்பட்ட

  • குைிகளில் 10 கிவைா சதாழு உரம், ஒரு கிவைா வேப்பம் பிண்ணாக்கு, 1.3

    ெதவீதம் லிண்வடன் குருறண 100 கிராம் ஆகியேற்றை வமல்

    மண்ணுடன் கைந்து இட்டு, ஒட்டு மாங்கன்றுகறள ஒட்டுப்பகுதி

    தறரநிறையிலிருந்து அறர அடி உயரத்தில் இருக்குமாறு நட வேண்டும்.

    முதைாண்டு ஒரு மரத்துக்கு 10 கிவைா சதாழு உரம், 450 கிராம் யூாியா,

    1,250 கிராம் சூப்பர் பாஸ்வபட், 500 கிராம் மூவரட் ஆப் சபாட்டாஷ்

    உரங்கறள இடவேண்டும். ஆண்டுவதாறும் மரம் ஒன்றுக்கு முந்றதய

    ஆண்டு உர அளவுடன் வமற்கண்டோறு உரங்கறள கூடுதைாக வெர்த்து

    இடவேண்டும்.

    6ஆேது ஆண்டிலிருந்து ஒரு மரத்துக்கு 50 கிவைா சதாழு உரம், 2.25

    கிவைா யூாியா, 6.25 கிவைா சூப்பர் பாஸ்வபட், 2.50 கிவைா மூவரட் ஆப்

    சபாட்டாஷ் ஆகிய உரங்கள் இடவேண்டும்.

    சநல்லி: ோிறெக்கு ோிறெ 6 மீ, செடிக்கு செடி 6 மீ இறடசேளியில்

    நடவு செய்யைாம். 3 அடிக்கு 3 அடிக்கு 3 அடி என்ை அளேில்

    எடுக்கப்பட்ட குைிகளில் 10 கிவைா சதாழு உரம் 1 கிவைா வேப்பம்

    பிண்ணாக்கு, 1.3 ெதவீதம் லிண்வடன் குருறண 100 கிராம் ஆகியேற்றை

    வமல் மண்ணுடன் கைந்து இட்டு, ஓட்டு சநல்லிக் கன்றுகறள

    நடவேண்டும்.

    நான்காம் ஆண்டு காய்க்கத் சதாடங்கியதும், ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு

    50 கிவைா சதாழு உரம், 1.50 கிவைா யூாியா, ஒரு கிவைா சூப்பர்

    பாஸ்வபட், ஒரு கிவைா மூவரட் ஆப் சபாட்டாஷ் ஆகிய உரங்கறள இரு

    முறை பிாித்து இடவேண்டும்.

    ெப்வபாட்டா: ோிறெக்கு ோிறெ 8 மீ, செடிக்குச் செடி 8 மீ

    இறடசேளியில் நடவு செய்யைாம். அடர் நடவு முறையில் ோிறெக்கு

    ோிறெ 8 மீ, செடிக்குச் செடி 4 மீ இறடசேளியில் நடவு செய்யைாம். 3

    அடிக்கு 3 அடிக்கு 3 அடி அளேில் எடுக்கப்பட்ட குைிகளில் 10 கிவைா

    சதாழு உரம், ஒரு கிவைா வேப்பம் பிண்ணாக்கு, 1.3 ெதவீதம் லிண்வடன்

  • குருறண 100 கிராம் ஆகியேற்றை வமல் மண்ணுடன் கைந்து இட்டு,

    ஒட்டு ெப்வபாட்டா கன்றுகறள நடவேண்டும்.

    முதைாண்டு ஒரு மரத்துக்கு 10 கிவைா சதாழு உரம், 450 கிராம் யூாியா,

    1,250 கிராம் சூப்பர் பாஸ்வபட், 500 கிராம் மூவரட் ஆப் சபாட்டாஷ்

    உரங்கறள இடவேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மரம் ஒன்றுக்கு இவத

    அளேில் கூடுதைாக உரமிட வேண்டும். 6ஆம் ஆண்டு முதல் ஒரு

    மரத்துக்கு 50 கிவைா சதாழு உரம், 2.2.5 கிவைா யூாியா, 6.25 கிவைா

    சூப்பர் பாஸ்வபட், 2.50 கிவைா மூவரட் ஆப் சபாட்டாஷ் உரங்கறள

    இடவேண்டும்.

    எலுமிச்றெ: ோிறெக்கு ோிறெ 5 மீ, செடிக்கு செடி 5 மீ இறடசேளியில்

    நடவேண்டும். 2.5 அடிக்கு 2.5 அடிக்கு 2.5 அடியில் எடுக்கப்பட்ட

    குைியில் நடவு செய்யும்வபாது, குைிக்கு 10 கிவைா சதாழு உரம், 250

    கிராம் வேப்பம் பிண்ணாக்கு இட்டு நடவேண்டும்.

    முதல் ஆண்டுக்கு மரத்துக்கு 10 கிவைா சதாழு உரம், 450 கிராம் யூாியா,

    625 கிராம் சூப்பர் பாஸ்வபட், 170 கிராம் சபாட்டாஷ் உரங்கறள

    இடவேண்டும். ஆண்டுவதாறும் மரத்துக்கு 5 கிவைா சதாழு உரம், 220

    கிராம் யூாியா, 150 கிராம் சூப்பர் பாஸ்வபட், 70 கிராம் சபாட்டாஷ்

    உரங்கறள அதிகாித்து இடவேண்டும்.

    6ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் 30 கிவைா சதாழு உரம், 1,350

    கிராம் யூாியா, 1,250 கிராம் சூப்பர் பாஸ்வபட், 500 கிராம் சபாட்டாஷ்

    உரங்கறள இடவேண்டும். இவ்ோறு இடும் உரங்களில் மார்ச் மாதத்தில்

    யூாியா மட்டும், அக்வடாபர் மாதத்தில் பாதியாக பிாித்து இடுதல்

    வேண்டும்.

    சகாய்யா: ோிறெக்கு ோிறெ 5 - 6 மீ, செடிக்கு செடி 5 - 6 மீ

    இறடசேளியில் நடவேண்டும். 1.5 அடிக்கு 1.5 அடிக்கு 1.5 அடி என்ை

    அளேில் எடுக்கப்பட்ட குைியில் 10 கிவைா சதாழு உரம், ஒரு கிவைா

  • வேப்பம் பிண்ணாக்கு, 1.3 ெதவீதம் லிண்வடன் குருறண 50 கிராம்

    ஆகியேற்றை வமல் மண்ணுடன் கைந்து இட்டு, சகாய்யா பதியன்

    கன்றுகறள நடவேண்டும்.

    மார்ச், அக்வடாபாில் காய்க்கத் சதாடங்கிய மரங்களுக்கு மரத்துக்கு 50

    கிவைா சதாழு உரம், 2.25 கிவைா யூாியா, 6.25 கிவைா சூப்பர் பாஸ்வபட்,

    1.75 கிவைா மூவரட் ஆப் சபாட்டாஷ் உரங்கறள 2ஆகப் பிாித்து

    இடவேண்டும். சகாய்யா மகசூறை வமம்படுத்த ஒரு ெதம் யூாியா,

    அதாேது ஒரு லிட்டர் நீாில் 10 கிராம் கைந்து, அறர ெதவீதம் துத்தநாக

    ெல்வபட்றட ஒரு லிட்டர் நீாில் 5 கிராம் அளேில் கைந்த கறரெறை மார்ச்,

    அக்வடாபாில் இறைேைி உணோகத் சதளிக்க வேண்டும்.

    பை மரக் கன்றுகறள ஒட்டுப் பகுதி தறரயிலிருந்து அறர அடி உயரத்தில்

    இருக்குமாறு நடவேண்டும். ஆதரவுக்கு குச்ெி நட்டு, தளர்ோகக்

    கட்டிேிடவேண்டும். உரங்கறள மரத்திலிருந்து ஒன்ைறர அடி ேிட்டு

    இறைப் பரப்புக்குள் அறர ேட்டமாக முக்கால் அடி ஆைக் குைியில்

    றேத்து மூடவேண்டும்."பை மரக் கன்றுகறள ஒட்டுப் பகுதி

    தறரயிலிருந்துஅறர அடி உயரத்தில் இருக்குமாறு நட வேண்டும்.

    ஆதரவுக்கு குச்ெி நட்டு, தளர்ோகக் கட்டிேிடவேண்டும். உரங்கறள

    மரத்திலிருந்து ஒன்ைறர அடி ேிட்டு இறை பரப்புக்குள் அறர ேட்டமாக

    முக்கால் அடி ஆைக் குைியில் றேத்து மூட வேண்டும்."

    மண்ணுக்கு ேலு வெர்க்கும் பசுந்தறை உரங்கள்

    ரொயன உரங்களால் மண்ணின் தன்றம நாளுக்கு நாள் மாைி ேரும்

    நிறையில், பசுந்தறை உரம் மண்ணுக்கு தறைச்ெத்றத அளித்து

    பசுறமயான ேிேொயத்துக்கு ேைி ேகுக்கிைது.

    இதுகுைித்து திரூாில் இயங்கி ேரும் தமிழ்நாடு வேளாண் பல்கறைக்

    கைகத்தினர் கூைியது: பசுந்தாள், பசுந்தறை என்பது மண்ணுக்கு ேளம்

    வெர்க்கும் இன்ைிறமயாத உரமாகும். மண்ணுக்கு தறைச்ெத்றத

    அதிகளேில் சகாடுக்கும் உரமாக பசுந்தாள், பசுந்தறை உரங்கள்

  • உள்ளன.

    பசுந்தாள் உரம் என்பது தக்றகப் பூண்டு, ெணப்றப, மணிைா அகத்தி,

    சகாளஞ்ெி, நாிப்பயிறு ஆகியனோகும்.

    பசுந்தாள் என்பது ெித்தகத்தி, கிறளாிெிடியா ஆகியனோகும்.

    பசுந்தறை உரம்: இறை தறைகறளயும், புங்கம், வேம்பு, கிறளாிெிடியா,

    வேலிமொல், பூேரசு, ஆோறர, எருக்கு, ோறக வபான்ை இறைகறளயும்

    சேட்டி ேயலுக்கு இடுேது பசுந்தறை உரமாகும்.

    ெித்தகத்தி பருேம்: எல்ைா பருேத்துக்கும் ஏற்ைதாகும். குைிப்பாக மார்ச்-

    ஏப்ரல் மாதங்கள் ெிைந்த பருே காைமாகும். எல்ைா மண் ேறககளுக்கும்

    ஏற்ைதாகும்.

    ேிறத அளவு: ஒரு சஹக்வடருக்கு 30 முதல் 40 கிவைா ேிறத

    வதறேப்படும்.

    ேிறத வநர்த்தி: குைிப்பிட்ட றரவொபியம் நுண்ணுயிர் உரத்றத ஒரு

    சஹக்வடருக்கு 5 பாக்சகட் என்ை அளேில் ேிறதயுடன் கைந்து ேிறதக்க

    வேண்டும். றக ேிறதப்புக்கு 30 சென்டி மீட்டருக்கு 10 சென்டி மீட்டர்

    என்ை அளேில் இறடசேளி ேிட வேண்டும்.

    இதற்கு உரங்கள், பயிர் பாதுகாப்பு அேெியமில்றை. வதறேப்படும்

    பட்ெத்தில் புரவனாபாஸ் ஒரு ெதவீதத்றத பூ, காய் பருேத்தில் சதளிக்க

    வேண்டும்.

    நீர்ப்பாெனம்: 15 நாள்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ெ வேண்டும்.

    அறுேறட: ேிறதத்த 45 முதல் 60 நாள்களில் மண்ணில் மடக்கி உைவு

    செய்ய வேண்டும். கிறளாிெிடியா: சபாதுோக மறைக்காைங்களில் இறத

    நடைாம். ஜூறை, ஆகஸ்ட் அல்ைது செப்டம்பர், அக்வடாபர் மாதங்களில்

    இதன் நாற்றுகறள நடைாம்.

    இது எல்ைா மண் ேறககளிலும் ேளரும் தன்றம உறடயது.

    ேளர்க்கும் முறை: கிறளாிெிடியா ேிறதகள் அதிகளேில்

  • கிறடப்பதில்றை. எனவே இறத பதியன் வபாட்டு நடவு செய்யைாம்.

    நன்கு முற்ைிய நிறையில் உள்ள குச்ெிகறள ொணக் கறரெலில் நறனத்து

    நட வேண்டும். ேரப்புகளின் ஓரங்களில் 2 மீட்டர் இறடசேளியில்

    நடைாம். ேருடத்துக்கு இரண்டு முறை இதன் இறைகறள பைித்து

    பசுந்தறை உரமாக இடைாம்.

    மறைக் காைங்களில் இறைகறளயும், தண்டு பகுதிகறளயும் அறுத்து

    உரமாக பயன்படுத்தும் வபாது மீண்டும் நன்கு ேளர ஏதுோகின்ைது.

    இதற்கு பயிர் பாதுகாப்பு, உரங்கள் அேெியமில்றை. இந்த முறையில்

    பயிாிட்டால் ஒரு ேருடத்துக்கு ஒரு கிறளாிெிடியா செடியில் இருந்து 20

    கிவைா தறைச்ெத்து கிறடக்கிைது.

    றேக்வகாலும் உரம் தான்: சநல் அறுேறடக்குப் பின் ேயலில் உள்ள

    தாள்கறளயும், றேக்வகாறையும் உரமாக பயன்படுத்தைாம். சநல்

    றேக்வகாலில் 6 ெதவீத கந்தகச் ெத்து, 1.37 ெதவீத ொம்பல் ெத்து,

    ெிலிக்கான், 40 ெதவீத காிமம் ஆகிய ெத்துகள் உள்ளன.

    றேக்வகாறை ேயலில் மடக்கி உழுேதால் சஹக்வடருக்கு 45 கிவைா

    தறைச்ெத்தும், 7 முதல் 10 கிவைா மணிச்ெத்து கிறடக்கிைது. வமலும்

    நிைத்தில் ொம்பல் ெத்து, கந்தகச் ெத்து, ெிலிக்கான், மயில் துத்தம்,

    இரும்புச் ெத்து வபான்ை நுண்ணூட்ட ெத்துகறளயும் மண்ணில்

    கூட்டுகிைது.

    றேக்வகாறை ேயலில் ஒரு மாதத்துக்கு முன்பு இட்டு மக்க றேத்து

    உழுத பிைவக சநல் நடவு செய்ய வேண்டும். இதுவபால் ேிேொயிகள்

    இயற்றக முறையில் ேிேொயம் செய்து தங்களது ொகுபடிறய

    சபருக்கைாம் என்ைனர்.

    அைிந்து ேரும் நிறையில் நீைகிாி மார்சடன்!

  • வமற்குத் சதாடர்ச்ெி மறைப் பகுதிகளுக்வக உாிய அாிய ேறக

    உயிாினமான "நீைகிாி மார்சடன்' எண்ணிக்றக படிப்படியாக குறைந்து

    ேருகிைது. சுற்றுச்சூைல் மாசுப்படுேது, காடுகள் அைிக்கப்படுேது

    ஆகியேற்ைால் "நீைகிாி மார்சடன்' இப்வபாசதல்ைாம் இயற்றக

    ஆர்ேைர்களுக்கு அாிதாகவே காட்ெியளிக்கிைது.

    நீைகிாி மார்சடன் (ெண்ப்ஞ்ண்ழ்ண் ஙஹழ்ற்ங்ய்) என ஆங்கிைத்திலும்

    "சகாம்பு புலி' என சபாதுோக அறைக்கப்படும் இது, வமற்குத் சதாடர்ச்ெி

    மறைப் பகுதிகளில் காணப்படும் மிக அாிதான உயிாினங்களில் ஒன்று.

    நீைகிாி மார்சடன் மரநாய், கீாி, நீர்நாய் முதலிய ெிறு ஊனுண்ணி

    ேறகறயச் வெர்ந்தது. மரநாறயப் வபான்ை உடலும், நீண்ட அடர்ந்த

    ோலும், அைகான சேளிர் மஞ்ெள் அல்ைது ஆரஞ்சு நிை கழுத்தும்

    சகாண்ட ஒரு அைகான உயிாினமாகும்.

    நீைகிாி மார்சடன் ோல் தேிர உடல் 55 முதல் 65 செ.மீ நீளமும் ோல் 40

    முதல் 45 செ.மீ நீளமும் இருக்கும். எறட ஏைத்தாை 2.1 கிவைா

    சகாண்டது.

    நீைகிாி மார்சடன் பகலில் வேட்றடயாடும். மரத்றத ோைிடமாகக்

    சகாண்டிருந்தாலும் அவ்ேப்வபாது தறரக்கு ேரும். இந்த உயிாினம் ெிறு

    பாலூட்டிகள், பைறேகள், பூச்ெி முதைானேற்றை உணோகக்

  • சகாள்கிைது.

    மறையின் ேளங்கள்: வமற்குத் சதாடர்ச்ெி மறையின் ஒரு பகுதியான

    நீைகிாியில் புலி, யாறன, கரடி, சகாம்பு புலி, செந்நாய், பழுப்பு மரநாய்,

    அைங்கு, ெிறுத்றதப் பூறன, ேறரயாடு, நீைகிாி கருமந்தி, ெிங்கோல்

    குரங்கு, பைக்கும் அணில் மைபார் முள்ோல் எலி, சபாிய இருோெி,

    கருப்பு மரங்சகாத்தி, காட்டுக்குருகு, கருநாகம், பைக்கும் பல்லி, பை

    ேறகயான பூச்ெிகள் மற்றும் பை தாேரங்கள் உள்ளன.

    20 ஆண்டுகளுக்கு முன்பு ேறர நீைகிாி மாேட்டத்துக்கு சுற்றுைா

    செல்பேர்கள் நீைகிாி மார்சடன் உயிாினத்றத எளிதாக காணைாம்.

    மரத்துக்கு மரம் தாவுேறத சுற்றுைா செல்பேர்கள் எளிதாக கண்டு

    மகிழ்ந்தனர்.

    ஆனால், இப்வபாவதா நீைகிாி மார்சடறன காணுேது அாிதாகி

    ேருகிைது. வமலும் நீைகிாி மார்சடன் அைிேின் ேிளிம்பில் இருக்கும்

    ேிைங்காகவும் அைிேிக்கப்பட்டுள்ளது.

    செயற்றக உணவுகள்: நீைகிாி மார்சடன் சபரும்பாலும் மனிதர்கறள

    தேிர்க்க கூடியறே. ஆனால் அண்றம காைங்களில் மனிதர்கள்

    காடுகளில் வீசும் உணவுப் பண்டங்கறளயும் உண்ணத்

    சதாடங்கிேிட்டதாக ேன உயிாின ஆராய்ச்ெியாளர்கள் கருதுகின்ைனர்.

    நீைகிாி மார்சடன் ேனத்தில் கிறடக்கும் பைங்கள் வபான்ைேற்றை

    உள்சகாள்ளும் வபாது ேிழும் எச்ெத்தால், செடிகள் முறளக்க

    ோய்ப்புள்ளது. இதுவபான்று செடிகள் முறளப்பதால், மான் வபான்ை

    ேிைங்குகளுக்கு உணவு எளிதில் கிறடத்தது.

    இந்நிறையில், ேனத்தில் வபாதிய உணவு கிறடக்காத நிறையில்,

    ேனத்றத ேிட்டு ெமசேளிப் பகுதிக்கு ேந்த நீைகிாி மார்சடன் மனிதன்

    தூக்கி எைியும் உணறே உட்சகாள்ள சதாடங்கியுள்ளது.

    இது குைித்து ேனத்துறை அதிகாாி ஒருேர் கூைியது: நீைகிாி மார்சடன்

    ொதுோக சதாிந்தாலும் முன்சபல்ைாம் மனிதன் அதறன ெீண்டினால்

    கடித்துேிடும். ஆனால், இப்வபாது சுற்றுைாப் பயணிகள் அதிகாிக்கத்

  • சதாடங்கியுள்ளதால், அறே மனிதனுடன் இறணந்து ோை

    பைக்கப்பட்டுேிட்டது.

    எனவே அறே மனிதன் தரும் உணவுகறளயும் உட்சகாண்டு அைியத்

    சதாடங்கியுள்ளது.

    தமிைகத்தில் நீைகிாி மார்சடன் அதிகமாக களக்காடு, வதனி, நீைகிாி,

    முதுமறை, சபாள்ளாச்ெி, ோல்பாறை ஆகிய இடங்களில்

    காணப்படுகின்ைன என்ைார் அேர்.

    ேட மாேட்டங்களில் மறைக்கு ோய்ப்பு

    தமிைகத்தின் ேட மாேட்டங்கள், புதுச்வொியில் ஆங்காங்வக

    ேியாைக்கிைறம பைத்த மறை சபய்ய ோய்ப்பு உள்ளது என, ோனிறை

    ஆய்வு றமயம் சதாிேித்தது. சதன் வமற்குப் பருே மறை காைத்தில்

    ஏற்பட்ட சேப்பச்ெைனத�